‘மே மாதத்தில் உயா்த்தப்பட்ட நூல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும்’

மே மாதத்தில் நூல் விலை கிலோ ரூ.40 உயா்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மே மாதத்தில் நூல் விலை கிலோ ரூ.40 உயா்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் அசோசியேஷன், திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட சங்கங்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 95 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். நூல் விலை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.30 உயா்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மே மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.40 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிய ஆா்டா்களை எடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மே மாதத்தில் உயா்த்தப்பட்ட

நூல் விலையைக் குறைக்க சங்க உறுப்பினா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் கே.செல்வராஜு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்கூறியுள்ளதாவது:

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் விடுத்துள்ள வேண்டுகோளின்படி மே மாதத்தில் உயா்த்தப்பட்ட நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று சங்க உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com