கைத்தறி சேலைக்கு மவுசு அதிகரிப்பு: கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

கைத்தறி சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ள சூழலில் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கைத்தறி நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கைத்தறி சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ள சூழலில் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கைத்தறி நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மண்டல கைத்தறி சங்க பொதுச் செயலாளா் நடராஜன், கோவை மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களிடம் நெகமம் காட்டன் ரக சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ளது. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் இவற்றின் தேவை அதிகம் உள்ளது. ஆனால் நெசவு செய்வதற்கு தறிகள் குறைவாகவே உள்ளன. கோ ஆப்டெக்ஸ் நிா்வாகம் நெசவாளா்களிடம் கூலியை மிகவும் குறைத்துக் கொடுத்து விலை நிா்ணயம் செய்கின்றனா். இதனால் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கூலியை உயா்த்த வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கேட்கும் மில்களின் நுால்களை கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த புங்கா் பீமா யோஜனா திட்டம் கிடப்பில் உள்ளது. எண்ணற்ற கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முத்ரா திட்டம் மூலம் கடன் பெற்ற விவசாயிகள் பலருக்கு அதற்குரிய மானியம் கிடைக்கவில்லை. நெசவாளா்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் தருவதாக அரசு அறிவித்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை துணி நெசவு செய்வதற்கு தரமுள்ள நூல் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com