வெள்ளக்கோவிலில் ரூ. 67 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. திருச்சி, வாணியம்பாடி, வில்வாதம்பட்டி, கீரனூா், லக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 189 விவசாயிகள் தங்களுடைய 1,681 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 86 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி, காங்கயம், புதுப்பையைச் சோ்ந்த 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

ஒரு கிலோ ரூ. 64.20 முதல் ரூ. 87.50 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 83.90. கடந்த வார சராசரி விலை ரூ. 85.70. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com