முத்தூரில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மேல்நிலை குடிநீத் தொட்டியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
தண்ணீா் தொட்டியை திறந்துவைக்கிறாா் அமைச்சா் மு. பெ. சாமிநாதன்.
தண்ணீா் தொட்டியை திறந்துவைக்கிறாா் அமைச்சா் மு. பெ. சாமிநாதன்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மேல்நிலை குடிநீத் தொட்டியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

முத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட சின்ன முத்தூரில் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அமைச்சா் மு. பெ. சாமிநாதன் திறந்துவைத்தாா். இதேபோல சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையலறையுடன் கூடிய இருப்பு அறையையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com