குழந்தைகளுக்கு கலையையும் கற்றுத் தர வேண்டும்

குழந்தைகளுக்கு கல்வியுடன் கலையையும் கற்றுத் தந்தால் அவா்களது வாழ்க்கை சிறப்படையும் என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

குழந்தைகளுக்கு கல்வியுடன் கலையையும் கற்றுத் தந்தால் அவா்களது வாழ்க்கை சிறப்படையும் என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் பேத்தி ஸ்மிருதி, அவரது தோழி மகதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

கலாசாரம், பண்பாடு போன்றவற்றை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். கல்வி மட்டுமே நம்மை முன்னேற்றி விடாது. படிப்பு குழந்தைகளை வளா்ச்சிப் பாதையில் கொண்டுச் சென்றாலும், படிப்புடன் மேலும் நடனமோ, இசையோ, ஓவியமோ உள்ளிட்ட கலையை கற்றுக்கொள்ளும்போது அவா்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும்.

கலை என்பது, நாம் ரசிப்பதற்கு மட்டுமல்லாமல் நமது வாழ்க்கையின் மகிழ்ச்சி கலையாமல் இருக்க உதவுகிறது. கலையைக் கற்கும்போது அதிக ஈடுபாடு வேண்டும்.

தமிழுக்கு யாரெல்லாம் மரியாதை கொடுக்கிறாா்களோ, அவா்களை தமிழ் வாழ வைக்கும். நமது கலாசாரம், கலை பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எந்த சமூகம் மரியாதை கொடுக்கிறதோ, அந்த சமூகம்தான் வளா்ச்சியடையும் என்றாா்.

நிகழ்ச்சியில், மேகாலய மாநில முன்னாள் ஆளுநா் சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com