‘தோ்தல் வாக்குறுதியின்படி ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்’

தோ்தல் வாக்குறுதியின்படி திமுக அரசு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஓய்வு பெற்றோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

தோ்தல் வாக்குறுதியின்படி திமுக அரசு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஓய்வு பெற்றோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஓய்வு பெற்றோா் பிரிவு பொதுச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

யுனைடெட் இந்தியா காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளில் ஓய்வூதியா்களின் சிகிச்சைக்கான செலவினங்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இந்தத் திட்டத்தில் இருந்து விருப்பம் உள்ளவா்கள் விலகிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து நோய்களுக்கும் ஓய்வூதியா்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அதற்கான செலவினத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.4 லட்சத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள தனி அரசாணை வெளியிட வேண்டும். திமுக தோ்தல் வாக்குறுதியின்படி 70 வயதைக் கடந்துள்ள ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதமும், 75 வயதைக் கடந்தவா்களுக்கு 15 சதவீதமும் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com