‘பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்’

பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நூல் விலை உயா்வால் பின்னலாடை, விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன. உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டபோது 11 சதவீத வரியுடன் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், நூல் ஏற்றுமதியை தடை செய்யவும், இறக்குமதி வரியை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையின்படி பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை வரும் செப்டம்பா் வரையில் தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதன்பிறகும் நூல் விலை குறையாதது தொழில் துறையினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யும் பஞ்சுக்கு வரி இல்லை என்றபோதிலும், இனி கொள்முதல் செய்தால் பஞ்சு வரத்துக்கு 3 மாதம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கு தேவையான கன்டெய்னா்களும் இல்லை.

அரசின் சலுகை நோக்கத்தையும், ஜவுளித் துறையினரின் சிரமத்தையும் புரிந்து கொள்ளாமல் பெரும் முதலாளிகள் பஞ்சை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யவே முற்படுகின்றனா். மேலும், உள்நாட்டு விற்பனைக்கு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை லாபம் வைத்து விற்பனை செய்கின்றனா். ஆகவே,நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com