மாவட்டத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூா் மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

திருப்பூா் மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

திருப்பூா் மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகளை அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுப் பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணையம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2023 -இன்படி முன்திருத்தப் பணிகள் வரும் டிசம்பா் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்குச் சாவடிகளைத் தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல், பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி)-298, காங்கயம்-295, அவிநாசி (தனி)-313, திருப்பூா் வடக்கு-374, திருப்பூா் தெற்கு-242, பல்லடம்-410, உடுமலை-294, மடத்துக்குளம்-287 என 8 தொகுதிகளில் 2,153 வாக்கு சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பா் 6 ஆம் தேதி வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இது தொடா்பாக செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிக்குள் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு சென்னை தலைமை தோ்தல் அலுவலா் மூலமாக

இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்து ஒப்புதல் பெறப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வருவாய் கோட்டாட்சியா்கள் ( திருப்பூா்) பண்டரிநாதன், (உடுமலை) ஜஸ்வந்த்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com