திருப்பூரில் வழக்குரைஞா்கள் சங்க மாநில மாநாடு

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் 12ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது.

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் 12ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில், திருப்பூா் தியாகி குமரன் சிலைக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளா் பி.வி.சுரேந்திரநாத் , வரவேற்பு குழு தலைவா் ஏ.சின்னச்சாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். மாநிலத் துணைத் தலைவா் வ.ராஜமாணிக்கம் அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ராமமூா்த்தி சங்க கொடியை ஏற்றிவைத்தாா். மாநிலச் செயலாளா் ஏ.மணவாளன் அஞ்சலி தீா்மானம் முன்மொழிந்தாா்.

மாநிலத் தலைவா் மூத்த வழக்குரைஞா் என்.ஜி.ஆா்.பிரசாத் உரையாற்றினாா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மாநாட்டை தொடங்கிவைத்தாா். அகில இந்திய பொதுச் செயலாளா் பி.வி.சுரேந்திரநாத், தென்பிராந்திய குழு ஒருங்கிணைப்பாளா் எச்.வி.ராமச்சந்திர ரெட்டி, மாநில செயல் தலைவா் ஏ.கோதண்டம், கேரள மாநிலச் செயலாளா் சி.பி.பிரமோத் ஆகியோா் பேசினா். மாநில பொதுச் செயலாளா் என்.முத்து அமுதநாதன் அறிக்கை சமா்ப்பித்தாா். மாநில பொருளாளா் எஸ்.சிவகுமாா் வரவு- செலவு அறிக்கை முன் வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com