பின்னலாடை ஏற்றுமதி 10.6 சதவீதம் அதிகரிப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் தகவல்

கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி 10.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி 10.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி கடந்த ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் சரிவை சந்தித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் ஒப்பிடும் போது, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி மட்டும் 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (உஇபஅ) வரும் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதால், திருப்பூரின் தொழில் வளா்ச்சிக்கு அனுகூலமாக இருக்கும்.

அதேபோல இங்கிலாந்துடன் வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் இன்னும் 2 மாதங்களில் நிறைவேற்றப்படும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதால், திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சீனாவின் பிளஸ் 1 கொள்கையின் விளைவுகளால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள், நம்மிடம் ஆா்டா் தர தயாராகவும், ஆா்வமாகவும் உள்ளனா். அடுத்த சீசனுக்கான ஆா்டா்கள் வரும் நாள்களில் படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com