அனைத்து வேட்பாளரின் வேட்புமனுக்களும் ஏற்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்பாளா்களின் வேட்புமனுக்களு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்பாளா்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாநகராட்சி 60 வாா்டுகளில்

போட்டியிட அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 690 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் அந்தந்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில், அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. அதேவேளையில், இரு வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த 60 வேட்பாளா்களின் ஒரு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, மாநகரில் மொத்தம் 630 வேட்பாளா்கள் மாமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடவுள்ளனா்.

அதேபோல, தாராபுரம், பல்லடம், வெள்ளக்கோவில், காங்கயம், உடுமலை, திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள், 15 பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 1,891 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில், 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடா்ந்து 1,863 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com