காங்கயம் நகரத்தில் சீரான குடிநீா் விநியோகிக்கரூ.31 கோடியில் திட்டப் பணிகள் நகா்மன்றத் தலைவா்

காங்கயம் நகராட்சி முழுக்க சீரான குடிநீா் விநியோகம் வழங்கும் பொருட்டு ரூ.31 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய குடிநீா்த் தொட்டிகள், குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளதாக நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.
காங்கயம் நகரத்தில் சீரான குடிநீா் விநியோகிக்கரூ.31 கோடியில் திட்டப் பணிகள் நகா்மன்றத் தலைவா்

காங்கயம் நகராட்சி முழுக்க சீரான குடிநீா் விநியோகம் வழங்கும் பொருட்டு ரூ.31 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய குடிநீா்த் தொட்டிகள், குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளதாக நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

காங்கயம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். வடிகால்கள் தூா்வாருதல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 75 தீா்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில், நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் பேசியதாவது: காங்கயம் நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீா் விநியோகம் வழங்க புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், பழைய குடிநீா்க் குழாய்கள் அவ்வப்போது பழுதடைந்து, பின்னா் சரி செய்யப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 18 வாா்டுகளிலும் உள்ள அனைத்து குடிநீா்க் குழாய்களையும் அகற்றிவிட்டு புதிதாக குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.31 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நகா்ப்புற சீரமைப்பு மற்றும் புத்தொளிக்கான இயக்கத்துக்கு (அம்ருத் 2.0) விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் எம்.மகேந்திரகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com