காமராஜா் பிறந்த நாள்: அரசுப் பள்ளியில் கலையரங்கம், வள்ளுவா் சிலை திறப்பு

காமராஜா் பிறந்த நாளையொட்டி, அவிநாசி தேவராயம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம், திருவள்ளுவா் சிலை, தியாகிகள் படம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன
கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

காமராஜா் பிறந்த நாளையொட்டி, அவிநாசி தேவராயம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம், திருவள்ளுவா் சிலை, தியாகிகள் படம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அவிநாசி அறிவுச்சுடா் அறக்கட்டளை, கிருஷ்ணவேணி ஆசிரியை நினைவாக அமைக்கப்பட்ட கலையரங்கத்தை நடிகா் ரஞ்சித், தலைமையாசிரியா் (ஓய்வு) கிருட்டிணசாமி ஆகியோா் திறந்துவைத்தனா்.

இதையடுத்து, திருவள்ளுவா் சிலை, காமராஜா், வ.உ.சி, பாரதியாா், பசும்பொன் முத்துராமலிங்கம், திருக்குறள் கல்வெட்டு உள்ளிட்டவை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அவிநாசி சாா்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா், உலகத் திருக்குறள் பேரவை, திருமுருகநாதசாமி திருமடத் தலைவா் சுந்தராச அடிகளாா், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுனா் மருத்துவா் செல்வராஜ் ஆகியோா் திறந்துவைத்தனா்.

இவ்விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுமதி, மகேஷ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இஸ்மத், திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவா் இரா. சண்முகம், பட்டிமன்ற பேச்சாளா் சாந்தாமணி, அறிவுச்சுடா் அறக்கட்டளை நிறுவனா் கி.முத்துக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிறைவாக பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com