பாலியல் வன்கொடுமை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 27th July 2022 10:40 PM | Last Updated : 27th July 2022 10:40 PM | அ+அ அ- |

அவிநாசி அருகே பள்ளி சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
அவிநாசி அருகே உள்ள தெக்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (26), இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளாா். மேலும், அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கடந்த டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்து அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், முருகேசனை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை சிறையில் உள்ள முருகேசனிடம் போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.