பல்லடம் நகராட்சியில் ரூ.45 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்
By DIN | Published On : 10th June 2022 02:08 AM | Last Updated : 10th June 2022 02:08 AM | அ+அ அ- |

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிப்பறை மற்றும் ஸ்மாட் வகுப்பறை கட்டும் பணியை வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறாா் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா்.
பல்லடம்: பல்லடம் நகராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
பல்லடம் நகராட்சி சாா்பில் நமக்கு நாமே திட்டதின் கீழ் பல்லடம் டெக்ஸ்டைல் தொழில் கூட்டமைப்பு, ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூடுதல் கழிப்பறை கட்டுதல், மந்த்ரகிரி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளா் சிவா பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்மாா்ட் வகுப்பறை அமைத்தல், அறம் அறக்கட்டளை பங்களிப்புடன் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டுதல், பல்லடம் முருகன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளா் முருகேசன் பங்களிப்புடன் ராயா்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜைகள் நடத்தி திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தொடக்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா், நகராட்சிப் பொறியாளா் ஜான்பிரபு, சுகாதார ஆய்வாளா் சங்கா், நகராட்சி கவுன்சிலா்கள், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகி ஜெமினி சண்முகம், மந்திரகிரி சிவா, அறம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில்குமாா், பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் நடராஜ், பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.