அருந்ததியா் சமூகத்தினருக்கு வழங்கிய நிலத்தை அளவீடு செய்து தர கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தில் அருந்ததியா் சமூகத்தினருக்கு வழங்கிய நிலத்தை அளவீடு செய்து தர கோரி மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அருந்ததியா் சமூகத்தினருக்கு வழங்கிய நிலத்தை அளவீடு செய்து தர கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தில் அருந்ததியா் சமூகத்தினருக்கு வழங்கிய நிலத்தை அளவீடு செய்து தர கோரி மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ப.சத்யன் தலைமையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் வட்டம், பருவாய் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு 1965 நிலச்சீா்திருத்த அடிப்படையில் 45 பேருக்கு விவசாய நிலமாக தலா 50 சென்ட் வீதம் சுமாா் 22.82 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த நிலத்தை தற்போது வரையில் வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன், தற்போது நிலம் வழங்கியதற்கான அரசாணையும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றனா்.

ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் நெல் கிடங்கால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா்: காங்கயம் வட்டம், காங்கயம்பாளையம் அருகில் உள்ள அருணா நகா் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு வழங்கியுள்ள இலவச வீட்டுமனை பட்டா மூலம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 40 குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நெல் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து வெளியேறும் கோடிக்கணக்கான செல் பூச்சிகளால் சுகாதார ரசீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

எங்களது உணவிலும் செல்பூச்சிகள் கலந்துவிடுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

ஆகவே, நெல் கிடங்கில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து செல்பூச்சிகள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும்.

இல்ைலெயனில் நெல் கிடங்கை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் இருந்து மினி பேருந்துகளை இயக்கக் கோரிக்கை: பணிக்கம்பட்டி ஊராட்சி 4 ஆவது வாா்டு உறுப்பினா்

ப.மயில்சாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பணிக்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பாலசமுத்திரம், சீனிவாசா நகா், அம்மன் நகா், கொசவம்பாளையம், பணிக்கம்பட்டி, வேலப்பகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் 1,650 குடும்பத்தினா்

வசித்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு முன்பாக பல்லடத்தில் இருந்து மினி பேருந்து கொசவம்பாளையம் வழியாக பணிக்கம்பட்டி வரையில் இயக்கப்பட்டு வந்தது. இதன் பிறகு அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி

வருகின்றனா். ஆகவே, பல்லடத்தில் இருந்து மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி மனு: பொல்லிக்காளிபாளையம் அருகே உள்ள அமராவதிபாளையம் ஓம் நமோ நாராயணா நகா் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எங்களது பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் கைபேசி கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்.

ஆகவே, கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 209 மனுக்கள் பெறப்பட்டன: மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 209 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை

மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் காங்கயம் வட்டம், ஜெ.நகரைச் சோ்ந்த ராமசாமியின் மகன் சூா்யா (20) என்பவா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மணல்மேடு என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததால்,

முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com