அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த உற்சவத் திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த முதலை வாயிற் பிள்ளை உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற சுந்தரர் அழைக்கும் நிகழ்ச்சிக்கு திருவீதி உலாவில் அருள்பாலித்த சந்திரசேகரர் அம்பாள், சுந்தரர்.
இன்று நடைபெற்ற சுந்தரர் அழைக்கும் நிகழ்ச்சிக்கு திருவீதி உலாவில் அருள்பாலித்த சந்திரசேகரர் அம்பாள், சுந்தரர்.

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த முதலை வாயிற் பிள்ளை உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசி லிங்கேஸ்வர் கோயிலில் நடைபெற்ற முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த சுந்தரர் அற்புதம்-இறைவன் அருளால் சிவனின் தலங்களை பூஜித்து தேவாரப் பாடல்களை இசைத்தவாரு ஒவ்வொரு தலமாக சென்று வழிபட்டு வந்தார் சுந்தரர். அவிநாசிக்கு அவர் வந்த போது ஒரு வீதியில் எதிரெதிரே இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல இசையும் மற்றொன்றில் அழுகைக்குரலும் கேட்டது.

அழுகை குரல் கேட்ட வீட்டில் கங்காதரன் என்ற பிராமணர் வசித்து வந்தான். அவரும், அவரது மனைவியும் குழந்தைப் பேறு இல்லாததால், அவிநாசியப்பரை வணங்கி அவரது அருளால் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வந்தார்கள். அக்குழந்தைக்கு அவிநாசிலிங்கம் என்றும் பெயரிட்டிருந்தனர்.

சந்திரசேகரர்  - அம்பாள்
சந்திரசேகரர்  - அம்பாள்

ஒரு நாள் எதிர் வீட்டு பாலகனுடன் குளத்திற்கு விளையாட சென்ற போது அவிநாசிலிங்கத்தை ஒரு முதலை விழுங்கி விட்டது. உன் அருளால் பிறந்த குழந்தையை நீயே எடுத்துக்கொண்டாயே என்று கதறி அழுதனர். மேலும் அதே நாளில் எதிர் வீட்டு பாலகனுக்கு ஏழு வயதான போது பூணுல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கள் மகனும் இப்போது இருந்தால் அவனுக்கும் இதே போல் விழா நடத்தி இருக்கலாமே என்று நினைத்து தான் அவர்கள் அழுது கொண்டிருக்கிறார் என்பதை சுந்தரர் கேட்டறிந்தார்.

சுந்தரரை வரவேற்று உபசரித்த கங்காதரனும் அவரது மனைவியும் கண்ட சுந்தரர், பிள்ளையை இழந்த துக்கத்திலும் நீங்கள் என்னை உபசரிக்கிறீர்கள். உங்கள் பிள்ளையை முதலையிடமிருந்து மீட்டுக்கொடுக்காமல் நான் அவிநாசியப்பரை தரிசிக்கப்போவதில்லை என்று கூறினார் சுந்தரர். பிறகு குளத்தின் அருகே சென்ற சுந்தரர் "எற்றான் மறக்கேன்" என்று தொடங்கும் பதிகத்தை பாடத்தொடங்கினார். 

சிறிது நேரத்தில் நீர் வறண்டிருந்த குளம் நீர் நிரப்பியது. பதிகம் முடிவதற்கு முன்பே முதலை கரையை நெருங்கி பிள்ளையை உமிழ்ந்தது. இறைவன் அருளால் அந்தப் பிள்ளை 7 வயது பாலகனாகவே வெளியே வந்தான். கங்காதரனும் அவரது மனைவியும் ஆனந்தக்கண்ணீர் சொரிந்து தங்கள் பிள்ளையை தழுவி மகிழ்தனர். சுந்தரரும் மனம் மகிழ்ந்தார்.

இச்சிறப்புமிக்க முதலையுண்ட பாலகனை மீட்டுக்கொடுத்த உற்சவம் பங்குனி மாதத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சுந்தரர் பெருமானை அழைக்கும் நிகழ்ச்சி ஒதுவார்கள் திருமுறைகள் ஒத, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் இசைக்க நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து  அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் பதிகம் பாடி முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்தல் நிகழ்ச்சியும், கைலாய வாத்தியத்துடன் இரவு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com