முத்தூரில் 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 4,981 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 1,928 கிலோ. கிலோ ரூ.27.80 முதல் ரூ. 32.25 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.30.70. விற்பனைத் தொகை ரூ. 55 ஆயிரத்து 558. கொப்பரை 71 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 2,119 கிலோ. விலை கிலோ ரூ. 73.15 முதல் ரூ. 93.50 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 90.70.

80 விவசாயிகள், 13 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 4 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.46 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com