முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
By DIN | Published On : 03rd May 2022 01:22 AM | Last Updated : 03rd May 2022 01:22 AM | அ+அ அ- |

நடிகா் அஜித்குமாா் பிறந்த நாளையொட்டி, காங்கயத்தில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காங்கயம் வோ்கள் என்னும் தன்னாா்வலா் நடத்தும் டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவா்களுக்கு, காங்கயம் அஜித்குமாா் நற்பணி மன்றம் சாா்பில் கேரம்போா்டு, இறகுப் பந்து மட்டைகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் நற்பணி மன்றத்தின் காங்கயம் நிா்வாகி குப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.