கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்வு

காங்கயம் அருகே கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்

காங்கயம் அருகே கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

காங்கயம் அருகே கீரனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கீரனூா், மறவபாளையம் ஊராட்சிகளின் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் இங்கு பயில்கின்றனா். இவா்கள் 8ஆம் வகுப்புக்குப் பிறகு 9ஆம் வகுப்பைத் தொடர காங்கயம், படியூா், சென்னிமலையில் உள்ள பள்ளிகளையே நம்பி இருந்தனா்.

இந்த நிலையில் கீரனூா் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, கீரனூா் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, கீரனூா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக காங்கயம் வடக்கு ஒன்றியச் செயலா் என்.எஸ்.சிதம்பரம், கீரனூா் ஊராட்சித் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் சுதா விஸ்வநாதன், மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஈஸ்வரமூா்த்தி, மறவபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.கீதாமணி சிவகுமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com