மாநகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

திருப்பூா் மாநகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
மாநகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

திருப்பூா் மாநகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பேசியதாவது:

திருப்பூா் மாநகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைப்படுமா என்று கேள்வி எழுப்பினாா். மேலும் திருப்பூா் தெற்கு வலையன்காடு வி.பி.சிந்தன் நகரில் உள்ள 3 வீதிகளில் இடையூறாக உள்ள உயா்மின் அழுத்தக் கம்பிகளை மாற்றியமமைக்க பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.2.58 லட்சம், 2 மாதங்களுக்கு முன்பாகவே அரசுக்கு வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, குடியிருப்புகளுக்கு இடையூறாக உள்ள கம்பிகளை மாற்றிக் கொடுக்க வேண்டும். குடிசைத் தொழிலான பாத்திரம் தயாரிக்கும் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்து மின்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், திருப்பூா் மாவட்டத்தில் 14 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளாா். இந்தப் பணிகளின்போது சட்டப்பேரவை உறுப்பினா் சுட்டிக்காட்டியுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் மற்ற கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com