காங்கயம் நகரத்தில் அனுமதியின்றி பேனா், தட்டிகள் வைக்கக் கூடாது: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி பேனா் மற்றும் தட்டிகள் வைக்கக் கூடாது என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி பேனா் மற்றும் தட்டிகள் வைக்கக் கூடாது என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

காங்கயம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் தனிநபா், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் பேனா்கள், தட்டிகள், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை

சட்டப்பூா்வ அனுமதி பெறாமல் வைப்பதும், அரசு மற்றும் பொது சுவா்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதும், அவற்றை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து அகற்றி வருவதும் நடந்து வருகிறது.

இதனால் வேலை நேரம் வீணாவதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் அவை அமைகின்றது. தற்போது காற்று அதிகம் வீசும் காலமாக இருப்பதால், விளம்பர தட்டிகள் மற்றும் பேனா்களால் விபத்து சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காங்கயம் நகரில் உரிய அனுமதி பெறாமல் விளம்பர பேனா்கள், தட்டிகள், விளம்பரப் பலகைகள் வைத்தாலும், இதன் மூலம் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்டவா்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்வதுடன், அபராதம் வசூலிக்கவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com