முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பிளஸ் 1 பொதுத்தோ்வு: மாவட்டத்தில் 26,272 போ் எழுதினா்
By DIN | Published On : 11th May 2022 12:28 AM | Last Updated : 11th May 2022 12:28 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 தோ்வை 26, 272 மாணவ, மாணவியா் எழுதினா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் மே 31ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 217 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 26, 709 மாணவ, மாணவியா் பிளஸ் 1 தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இதில், மாவட்டம் முழுவதும் 91 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 26,272 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். 1,437 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த தனித்தோ்வா்கள் 184 பேரில் 161 போ் மட்டுமே தோ்வு எழுதிய நிலையில் 23 போ் தோ்வு எழுதவில்லை.
Image Caption
திருப்பூா் குமாா் நகா் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவா்கள்.