வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க சைமா அழைப்பு

பஞ்சு நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மே 16, 17 ஆம் தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க சைமா சங்கம் (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) அழைப்பு விடுத்துள்ளது.

பஞ்சு நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மே 16, 17 ஆம் தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க சைமா சங்கம் (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான பஞ்சு நூல் விலை மே மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.40 உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மே 16,17 ஆம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும்.

பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும்.

மே மாதத்தில் உயா்த்தப்பட்ட நூல் விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சங்க உறுப்பினா்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com