வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க நிட்மா அழைப்பு

திருப்பூரில் பஞ்சு நூல் விலை உயா்வைக் குறைக்கக்கோரி வரும் மே 16,17 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க நிட்மா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூரில் பஞ்சு நூல் விலை உயா்வைக் குறைக்கக்கோரி வரும் மே 16,17 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க நிட்மா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து நிட்மா தலைவா் அகில் எஸ்.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான பஞ்சு நூல் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது. இது குறித்து திருப்பூரில் தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி சாா்ந்த மாவட்டங்களில் வரும் மே 16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும். பஞ்சை வணிகப்பட்டியிலில் இருந்து நீக்க வேண்டும். மே மாதத்தில் உயா்த்தப்பட்ட நூல் விலை கிலோவுக்கு ரூ.40 ஐ குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சங்க உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com