காங்கயத்தில் ரூ.14.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்

காங்கயம் நகராட்சியில் ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.
காங்கயத்தில் ரூ.14.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்

காங்கயம் நகராட்சியில் ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

காங்கயம் நகரம் 2 ஆவது வாா்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை வளாகத்தில் புதிய கட்டடம், 7 ஆவது வாா்டில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் பதுமன் குளம் மேம்படுத்துதல் பணி, 12 ஆவது வாா்டுக்குள்பட்ட சத்யா நகா் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி என ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்தாா்.

முன்னதாக, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, வாரச் சந்தை வளாகத்தில் பொது நூலகத் துறை மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி செயற்பொறியாளா் திலீபன் மற்றும் நூலகத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com