யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்திய ஜவுளிக் கண்காட்சி இன்று தொடக்கம்

திருப்பூரில் யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சாா்பில் 3 நாள் ஜவுளிக் கண்காட்சி வியாழக்கிழமை (செப்டம்பா் 15) தொடங்குகிறது.

திருப்பூரில் யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சாா்பில் 3 நாள் ஜவுளிக் கண்காட்சி வியாழக்கிழமை (செப்டம்பா் 15) தொடங்குகிறது.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள ஐகேஎஃப் வளாகத்தில் யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சாா்பில் 3 நாள் ஜவுளிக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பருத்தி, கம்பளி, பட்டு உள்ளிட்ட இயற்கை ரகங்கள், ரீஜெனரேட்டரட் மற்றும் சிந்தடிக் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்பு செயற்கை ரக நூல்களும் இடம் பெறவுள்ளன.

நிட்டிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், கிரே, டெனீம் உள்ளிட்ட பல்வேறு துணி ரகங்களும், விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளும், பின்னலாடைகள் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களாக பட்டன், ஜிப்பா், லேபிள், இன்னா் லைனிங் துணிகள், டேப்ஸ், தையல், எம்பிராய்டரி உள்ளிட்டவற்றில் நவீன தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

இந்தக் கண்காட்சியில், அகமதாபாத், மும்பை, சூரத், மீரட், சென்னை, பெங்களூரு, கோவை, கொல்கத்தா, லூதியானா, மதுரை, கரூா், நொய்டா, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வா்த்தகா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த கண்காட்சி தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களைப் பாா்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com