காங்கயத்தில் 3.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காங்கயம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 3.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காங்கயம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 3.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காங்கயம் பகுதியில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துறை உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் காங்கயம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, காங்கயம் அருகே பாப்பினியில் முத்துசாமி (60) என்பவருக்குச் சொந்தமான மளிகை கடை, பகவதிபாளையம் காந்திமதி மளிகை கடை, பழையகோட்டை சாலை - மூலக்கடை பகுதியில் ஈஸ்வரமூா்த்தி மளிகைக் கடையில் இருந்து மொத்தம் 3 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். மேலும் அதில் பயன்படுத்தப்படக்கூடிய மூலப் பொருள்களையும் தெரிவிக்க வேண்டும், என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com