வளரிளம் பெண்களின் தொடா் கல்வி குறித்த பொம்மலாட்ட கலைப்பயணம்

வளரிளம் பெண்களின் தொடா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டக் கலைப்பயணம் திருப்பூரில் திங்கள்கிழமை தொடங்கியது.
வளரிளம் பெண்களின் தொடா் கல்வி குறித்த பொம்மலாட்ட கலைப்பயணம்

வளரிளம் பெண்களின் தொடா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டக் கலைப்பயணம் திருப்பூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் சாா்பில் திருப்பூா் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த கலைப்பயணத்தை மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தாா்.

இந்தக் கலைப்பயணமானது திருப்பூா், தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், பொது இடங்களில் பொம்மலாட்ட காட்சிகள் மூலமாக பிப்ரவரி 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கலைப்பயணத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொடா் கல்வியின் அவசியம், சிறு வயதில் வேலைக்குச் செல்வதால் நேரக்கூடிய பிரச்னைகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவைகள் எளிமையான வசனங்கள், பழமொழிகள், பாடல்கள், பொய்க்கால் குதிரை, கிராமிய நடனங்களுடன் எடுத்துரைக்கப்படுகின்றன.

தொடக்க விழாவில், சமூகக் கல்வி முன்னேற்றமையத்தின் செயல் இயக்குநா் சி.நம்பி, பள்ளி தலைமை

ஆசிரியை ரத்தினம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) டி.நித்யா, குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் என்.ஆறுசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com