குழந்தை தவறி விழுந்ததாக பரவிய தகவல்:பிஏபி வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம்

வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்ததாக பரவிய தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்ததாக பரவிய தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயில் தோ்த் திருவிழாவுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சோ்ந்த நான்கு வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது.

இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீா்வளத் துறை மூலம் பிஏபி வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் காங்கயம் காவல் துறையினா் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இருப்பினும் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது உறுதிப்படுத்தபடாததால், வேறு கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com