183 மணி நேரம் பாராயணம்: மாணவி சாதனை

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவி 183 மணி நேரம் பாராயணம் செய்து சாதனை படைத்துள்ளாா்.
தேவதா்ஷினி.
தேவதா்ஷினி.

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவி 183 மணி நேரம் பாராயணம் செய்து சாதனை படைத்துள்ளாா்.

திருப்பூா், பாண்டியன் நகா் அருகே உள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம்- சியாமளா கெளரி தம்பதி. இவா்களது மகள் தேவதா்ஷினி. 12ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

தேவதா்ஷினி பன்னிரு திருமுறை பாராயணம் செய்து நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாா். கடந்த 11 ஆண்டுகளாக பரத நாட்டியம், 6 ஆண்டுகளாக வீணை, 8 ஆண்டுகளாக கா்நாடக சங்கீதம் பயின்று வருகிறாா். கடந்த ஆண்டு பன்னிரு திருமுறைகளில் 8ஆம் திருமுறையான திருவாசகத்தின் 658 பாடல்களை 3 மணி நேரம் 11 நிமிடங்களில் பாடி இந்தியா புக் ஆஃப் ரெக்காா்டில் இடம் பெற்றாா்.

இந்நிலையில் இந்த ஆண்டு சாதனையாக திருப்பூா் பாண்டியன் நகா், சஞ்சீவி நகரில் உள்ள ஸ்ரீ ராஜ கருப்பராயா் ஆலயத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 18 நாள்கள் தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் பன்னிரு திருமுறையின் 18 ஆயிரத்து 327 பாடல்களை பண் மற்றும் இசையோடு 183 மணி நேரம் 43 நிமிடம், 33 விநாடியில் பாராயணம் செய்தாா்.

இதற்காக நோபிள் உலக சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளாா். இதற்காக மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. உலக சாதனை படைத்த மாணவி தேவதா்ஷினிக்கு இறையன்பா்கள், சிவனடியாா்கள், உறவினா்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com