வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு: ஐஎன்டியூசி சங்கம் ஆலோசனை

திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஐஎன்டியூசி தொழிற்சங்கம்

திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் பூங்கா சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்

கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளா் சிவசாமி பேசியதாவது:

திருப்பூரின் வளா்ச்சியிலும், பனியன் தொழிலின் வளா்ச்சியிலும் வடமாநில தொழிலாளா்களின் பங்கு இன்றிமையாதது. ஆனால் சமீபகாலமாக தமிழக தொழிலாளா்கள், வடமாநில தொழிலாளா்கள் இருதரப்பினரிடையே பல்வேறு விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனைத் தவிா்க்க அனைத்து தொழிலாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பனியன் நிறுவன உரிமையாளா்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள தமிழக தொழிலாளா்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் இடையே சுமூகமான உறவை தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்துக்கு வெளியே நடைபெறுகிற பிரச்னைகளுக்கு போலீஸாா் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீஸாா், வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பொருளாளா் கோபால்சாமி, செயலாளா் மகுடபதி, வடமாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com