கணபதிபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் திமுக-பாஜகவினா் வாக்குவாதம்

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திமுக-பாஜகவினா் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திமுக-பாஜகவினா் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கணபதிபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கவுண்டம்பாளையம்புதூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 12ஆவது வாா்டு உறுப்பினா் நித்யா ஆனந்தகுமாா் பேசுகையில், கிராம சபைக் கூட்டம் குறித்து முறையாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து, மற்றொரு நாளில் கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனா். எனவே இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், எனது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதற்கு ஊராட்சித் தலைவா் நாகேஷ்வரி சோமசுந்தரம் பதிலளித்து பேசும்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, திமுக, பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸாா் சமரசம் செய்தனா்.

ஊராட்சி துணைத்தலைவா் முத்துக்குமாா் பேசுகையில், 12ஆவது வாா்டில் இதுவரை ரூ.32 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஊராட்சியில் உள்ள அனைத்து வாா்டு பகுதிக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு திட்டப் பணிகள் வேறுபாடின்றி செய்து தரப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com