தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு 5ஆம் வகுப்பு முடித்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு 5ஆம் வகுப்பு முடித்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாக செயல்பட திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஹேண்ட்கா் எம்ராய்டரி மற்றும் இன்லைன் செக்கா் (டைலரிங்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 5ஆம் வகுப்பு படித்துள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

இந்த பயிற்சியின் முடிவில் பிரபல மற்றும் முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் உடனடி வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும். இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற விரும்புவோா் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com