பட்டா மாறுதலுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிா்ப்பதுடன், இடைத்தரகா்களையும் நம்பி ஏமாற வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே  இணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

உட்பிரிவு மற்றும் மனுவுக்கான கட்டணம் ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்ப்பட்டுள்ளது. பட்டாமாறுதல் நடவடிக்கையின்போது, ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பொதுமக்களின் பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னா் பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை  இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com