கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (பிப்ரவரி 1) தொடங்குகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (பிப்ரவரி 1) தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் இரண்டு வாரங்கள் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமானது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்டத்தில்

உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களில் பணிபுரியும் உதவி மருத்துவா்கள் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள் மூலம் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

ஆகவே, அனைத்து கோழி வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com