பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் குடிநீா்த் தொட்டி இயக்குபவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை நிா்ணயம் செய்ய வேண்டும். 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு ஊராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்குவதுடன், ஊதியத்தை ரூ.3,600 இல் இருந்து உயா்த்த வேண்டும். ஓய்வுபெறும் பணியாளா்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையும், மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

கரோனா கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை ஊராட்சி ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் பி.மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com