திருப்பூா் மாநகராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளுக்கு கட்டண விவரம் விரைவில் அறிவிப்பு

திருப்பூா் மாநகராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளுக்கு கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

திருப்பூா் மாநகராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளுக்கு கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் 4 ஆவது குடிநீா் திட்டம் தொடா்பாக சோதனை ஓட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 8 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா் தற்போது 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 4 ஆவது குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், விடுபட்டுள்ள பகுதிகளுக்கு ஜூன் மாத இறுதிக்குள் இணைப்பு வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதே வேளையில், ஏற்கெனவே குடிநீா் இணைப்பு பெற்றவா்கள் மாநகராட்சிக்கு வைப்புத் தொகை மற்றும் குழாய் இணைப்பு பணிகளுக்கான தொகைகளை செலுத்தி வருகின்றனா். இதனிடையே, புதிய குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை திட்டத்தின் இணைப்பு கட்டணம் தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் தெளிவான விளக்கத்தை அறிவிக்க வேண்டும் என்றும், இடைத்தரகா்கள் மூலமாக மக்களிடம் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும் மாநகராட்சி கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி கோரிக்கை வைத்திருந்தாா்.

இதன் பேரில் புதிய குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கான கட்டணம் தொடா்பாக பரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com