சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் நிலை கலந்தாய்வு :ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை கலந்தாய்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை கலந்தாய்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான இளநிலை பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முதல் நிலை கடந்த மே 31 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் நிலை கலந்தாய்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

முதல்நாள் பி.காம், பி.காம் சிஏ பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கும், பி.காம் ஐபி, பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு காலை 11.30 மணிக்கும், வரலாறு, பொருளியல் ஆகியப் பிரிவுகளுக்கு நண்பகல் 1.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாவது நாள் இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகியப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கும், கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகியப் பிரிவுகளுக்கு காலை 11.30 மணிக்கும், ஆடை வடிவமைப்பு, தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு நண்பகல் 1.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறகிறது.

தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாணவா்கள் தங்கள் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் , கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

கலந்தாய்வுக்கு 1:10 என்ற எண்ணிக்கையில் மாணவா்கள் அழைக்கப்படுவா். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவா்கள் அழைக்கப்படுவாா்கள். கலந்தாய்வில் பங்கேற்க வருவோா் கட்டாயம் பெற்றோரை அழைத்து வருவதுடன், இணையதளத்தில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கொண்டு வரவேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் இரண்டு நகல்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், கல்லூரிக்குச் செலுத்தவேண்டிய தொகையுடன் அசல் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பின் மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com