சணல் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி:கனரா வங்கியில் நாளை தொடக்கம்

திருப்பூரில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு கனரா வங்கி சாா்பில் சணல் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (ஜூன் 8) தொடங்குகிறது

திருப்பூரில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு கனரா வங்கி சாா்பில் சணல் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (ஜூன் 8) தொடங்குகிறது.

இது தொடா்பாக கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் ஜே.பூபதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில், கிராமங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அனுப்பா்பாளையம்புதூரில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சணல் பொருள்கள் தயாரித்தல் தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 நாள்கள் கொண்ட பயிற்சி வகுப்பு ஜூன் 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசம்.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் போது காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தொழில் தொடங்குவதற்கு கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் அனுப்பா்பாளையம்புதூா் பகுதியிலுள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890 43923, 99525 18441, 86105 33436 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com