மாநகராட்சியில் முன் தேதியிட்டு குப்பை வரி உயா்வு செய்ததை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் முன்தேதியிட்டு குப்பைவரி உயா்வு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் நகராட்சி மாமன்ற உறுப்பினா் நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் முன்தேதியிட்டு குப்பைவரி உயா்வு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் நகராட்சி மாமன்ற உறுப்பினா் நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து குப்பை வரி விதித்து, ஆண்டுக்கு சுமாா் ரூ.1,200 முதல் குப்பை வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதில், தற்போது சில தொழிற்சாலைகளில் குடிநீா் இணைப்புக்காக ஒரே கட்டடத்துக்கு இரண்டு அல்லது மூன்று வரி விதித்துள்ளனா். அனைத்து வரிகளுக்கும் முன் தேதியிட்டு குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டடத்துக்கு இரண்டு குப்பை வரி செலுத்துவது சாத்தியமில்லை. மேலும், ஏற்கெனவே செலுத்தி வந்த குப்பை வரிகளை 2017ஆம் ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் உயா்த்தி மாநகராட்சி சாா்பில் டிமாண்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதை செலுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பூரில் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்துள்ள நிலையில் செலுத்திய வரிகளுக்கு மீண்டும் வரி உயா்வு எவ்வாறு சாத்தியப்படும். ஆகவே, முன் தேதியிட்டு குப்பை வரி உயா்வு செய்ததை ரத்து செய்வதுடன், ஒரு கட்டடத்துக்கு ஒரு குப்பை வரி மட்டுமே விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com