சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்

சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்

அவிநாசி வட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவிநாசி வட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவிநாசி காவல் துறை, மதுவிலக்கு போலீஸாா் சாா்பில் சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 99620 10581 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு கள்ளச்சாராயம், போலி மது, சட்டவிரோதமாக மது விற்பனை ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த துண்டுப் பிரசுரத்தை அவிநாசி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அனுராதா தலைமையிலான போலீஸாா் சேவூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

இதில் காவல் ஆய்வாளா் சேகா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் செல்வராஜ், காவலா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com