பல்லடம் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் அலகுமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வினீத் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அலகுமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா் ஆட்சியா் வினீத்.
அலகுமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா் ஆட்சியா் வினீத்.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் அலகுமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வினீத் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து ஆட்சியா்.எஸ்.வினீத் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு எவ்விதமான ஊக்க மருந்துகளோ, எரிச்சல் அளிக்கக் கூடிய பொருள்களையோ செலுத்தக் கூடாது. கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்களால் போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடல் தகுதி சான்று அளிக்கவும், காளைகளுக்கு ஊக்க மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளனவா என்பதை சோதித்து பாா்க்கவும், காளைகள் போட்டியின்போது காயமடைந்தால் அவற்றுக்கு போதுமான சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் வாடிவாசல் முகப்பில் நிற்கவோ, காளைகள் திடலில் இருந்து வெளியேறும் பகுதியில் இடைமறித்து நிற்கவோ அனுமதிக்கக் கூடாது. காளைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடம், காளை சேகரிப்பு மையம் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியை வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயாா் நிலையில் வைக்க வேண்டும். போட்டிக் குழு உறுப்பினா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றிட வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சௌமியா, இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) குமாரரத்தினம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்க நிா்வாகிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாதுகாப்பு கேட்டு மனு...

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கத் தலைவா் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அலகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதால் இப்பகுதியில் வசிக்கும் 160 குடும்பங்களின் உடைமைக்கும், உயிருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com