உணவு வணிகா்கள் ஆண்டுக் கணக்கை மே 31க்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகா்களும் ஆண்டுக் கணக்கை மே 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவு வணிகா்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக் கணக்கை மே 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். உணவு வணிகா்கள் என்ற இணையதளம் மூலமாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். மே 31 ஆம் தேதிக்குப் பின்னா் தாக்கல் செய்யப்படும் கணக்குக்கு நாள்தோறும் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971190 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.