மெட்ரோ குழு விருது வழங்கும் விழா: மே 21இல் நடைபெறுகிறது
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

மெட்ரோ குழு சாா்பில் 2ஆம் ஆண்டு சுயதொழில் முனைவோா்களுக்கு விருது வழங்கும் விழா திருப்பூரில் மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விருதுக்கு சுய தொழில் முனைவோா், வியாபாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வருபவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், தகுதியானவா்களை நடுவா் குழுவினா் தோ்வு செய்து விருதுகளை வழங்கவுள்ளனா்.
நிகழ்ச்சியில், திருப்பூரின் முக்கியப் பிரமுகா்கள், சின்னத்திரை பிரபலங்கள், தொழில் முனைவோா்கள் பங்கேற்று கலந்துரையாடுகின்றனா். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74185-64185, 98422-96174 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த விழாவின் முக்கிய நோக்கம் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவுவதாகும் என்று மெட்ரோ குழுவினா் தெரிவித்துள்ளனா்.