மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

அவிநாசி அருகே சாலையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அவிநாசி-பெருமாநல்லூா் சாலை பழங்கரை பிரிவில் ஆதரவற்ற நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்தப் பெண் குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை வீசிச் சென்ற நபா்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com