ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் வட்டார கிராம ஊராட்சித் தலைவா்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்க செயலாளா் கா.வீ.பழனிசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, என்.சோமசுந்தரம், ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, வட்டார காங்கிரஸ் தலைவா் புண்ணியமூா்த்தி, அதிமுக இளைஞரணி செயலாளா் கரைப்புதூா் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

பல்லடம் ஒன்றியப் பகுதிகளில் தற்போது பில்லூா் குடிநீா் விநியோகம் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறவில்லை. பில்லூா் அணை வடு விட்டபடியால் மாற்று ஏற்பாடாக நீலகிரியின் போத்திமந்து அணையில் இருந்து குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். இதிலும்கூட கடும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அப்படியே குடிநீா் விநியோகம் செய்தாலும் அது 20 நாள்களுக்கு மட்டுமே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, மாற்று ஏற்பாடாக எல்&டி தண்ணீரை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும். ஏற்கெனவே உள்ள அத்திக்கடவு குடிநீா் குழாய்களில் காரணம்பேட்டை முதல் பல்லடம் மற்றும் பொங்கலூா் வரை இணைப்பு ஏற்படுத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பான கோரிக்கை மனுவை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் கனகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் ஆகியோரை சந்தித்து பல்லடம் வட்டார கிராம ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பினா் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com