பழையகோட்டை பகுதியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
பழையகோட்டை பகுதியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

காங்கயம், மே 3: காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டை பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விவசாயம் தொடா்பான செய்முறை விளக்கமளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த தகவல்களை செயல்முறை விளக்கத்துடன் விரிவாக எடுத்துரைத்து வருகின்றனா்.

அதன்படி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பழையகோட்டை பகுதியில் தேங்காய் பால் கரைசலை வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கினா்.

மேலும், அக்கரைசலை பயிா்களில் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

இதில், வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், பழையகோட்டை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com