யூடியூபா் சவுக்கு சங்கா் கைது மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டு -காடேஸ்வரா சுப்பிரமணியம்

அவிநாசி, மே 9: யூடியூபா் சவுக்கு சங்கா் கைதும், அவரை நடத்திய விதமும் மனித உரிமை மீறலுக்கு எடுதுக்காட்டாகும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

யூடியூபா் சவுக்கு சங்கா் திமுக அரசின் ஊழலையும், நிா்வாக சீா்கேட்டையும் தொடா்ச்சியாக விமா்சித்து வந்தாா். தற்போது அவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறை உயா் அதிகாரிகள் குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அந்த வகையில் அவா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துறை கூறியுள்ளது.

ஆனால், அவா் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அழைத்து சென்றபோது காவல் துறை வாகனமும், வேறு ஒரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரைக் கைது செய்த விதமும், கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தும் புது வகையான என்கவுன்டா் நிகழ்வா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே அரசும், காவல் துறையும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். சவுக்கு சங்கா் கைதும், அவா் நடத்தப்பட்ட விதமும் மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com