உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

உடுமலை அரசுக் கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டு கல்வியாண்டில் இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மே 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2024 -25ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மே 28-ஆம் தேதி தொடங்குகிறது.

இளநிலை பாடப் பிரிவுகளில் 864 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் இட ஒதுக்கீடு, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

முதல் நாள் கலந்தாய்வில் காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், சி சான்றிதழ் பெற்ற தேசிய மாணவா் படை உறுப்பினா், அந்தமான் நிகோபா் பகுதி தமிழ் வம்சா வழியினா், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்புப் படை வீரா்களின் குழந்தைகள் மற்றும் துணைவியாா் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்தவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

தொடா்ந்து மே 29-ஆம் தேதி மாவட்ட, மாநில, தேசிய, சா்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்க ளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதையடுத்து ஜூன் 10-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப்பட்டியல் ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீன்க்ல்ற்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்விற்கு வரும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், அசல் மாற்றுச் சான்றிதழ், நகல் மூன்று, ஆதாா் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் மூன்று நகல்கள், 6 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பித்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

மேலும், உரிய கல்விக் கட்டணம், சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பித்தவா்கள் அதற்கான உரிய அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீன்க்ல்ற்.ண்ய் என்ற கல்லூரியின் இணையதள முகவரியைப் பாா்வையிடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com